டெல்லி: நாடாளுமன்றத்தி்ல் இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பையும் சேர்த்து வகிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்தார். தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் பல சலுகைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஆனால், இது ஒரு இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அதிகமான அறிவிப்புகளை வெளியிட முடியாது. வெறும் வரவு-செலவு அறிக்கையாகத்தான் அது இருக்க வேண்டும் என்பது விதி. ஆனாலும், அதையும் மீறி பல சலுகைகளை மத்திய அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது.
குறிப்பாக வரிகள் குறைப்பு, வட்டிக் குறைப்புகள், வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு போன்றவை குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
மேலும் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பாக சில உதவி நிதித் திட்டங்கள், சலுகைகளும் பட்ஜெட்டில் இடம் பெறக் கூடும் எனத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக