டெல்லி: வெளிநாடுகளில் வேலை செய்து வந்த சுமார் 20,000 இந்தியர்கள், உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழந்து நாடு திரும்பியுள்ளனர்
பணிக்கான விசா காலத்தைப் புதுப்பிக்க மறுத்துவிட்ட நிறுவனங்கள், அனைவரையும திருப்பி அனுப்பிவிட்டனவாம்
இத் தகவலை, வெளிநாடு வாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
அவர் கூறுகையில், வெளிநாடுகளில் நிறுவன உரிமையாளர்கள் இந்திய தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகளை தங்கள் வசமே வைத்துக்கொள்வது 50 சதவீதம் குறைந்துள்ளது.
இன்னும் சில நிறுவன உரிமையாளர்கள் தொழிலாளர்களின் விசாக்களை தங்கள் வசமே வைத்துக்கொண்டு, அதை உரிய காலத்தில் புதுப்பிப்பது இல்லை. இதனால் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக குடியிருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த விவகாரம் குறித்து வெளிநாடுகளுடன் அரசு பேச்சு நடத்தி வருகிறது.
இப்போது நாடு திரும்பியுள்ளோர் அனைவரின் விசாக்களை அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் புதுப்பிக்காமல் விட்டுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் எதுவும் செய்வதற்கில்லை. பல நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளதால் நாடு திரும்புவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக