நியூயார்க்: அமெரிக்க புலனாய்வுத்துறை எச்.1பி விசா மோசடியைக் கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் ஏழு மாகாணங்களில் 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எச்1பி விசா பெறுவதற்காக போலியான ஆவணங்களை தாக்கல் செய்து இந்த விசாக்கள் பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர் நலத்துறையின் சான்றிதழ் இல்லாமல் வேலையிலும் இவர்கள் சேர்ந்துள்ளனர்.இதுதொடர்பாக எச்1பி விசாவுக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அமெரிக்க புலனாய்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
எச்1பி விசாவுடன் கூடிய பணியாளர்களை 2 ஆண்டுகளுக்கு பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு அரசின் பெயில் அவுட்டை (உதவி நிதி) தடை செய்யும் சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வர அமெரிக்க செனட் சபை முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக