சனி, 3 அக்டோபர், 2009

தேக்கடி விபத்து: தொலைபேசி எண்கள்

தேக்கடி, அக். 01: தேக்கடியில் நடந்த விபத்து குறித்து அறிய தனி தகவல் அமைக்கப்பட்டுள்ளது. தேக்கடியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30பேர் பலியானார்கள். இது குறித்து தகவல் பெற தனியாக தகவல் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொலைபேசி எண்கள் வருமாறு: 0471- 2333198, 0486- 9222620, 0486- 9222111, செல்: 9446052361. மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்

நெல்லை - கள்ளிக்குளம் வி.ஏ.ஓ.,க்கு ஆப்பு

திருநெல்வேலி: நெல்லை அருகே, நிலப்பட்டா பெயர் மாற்றம் செய்து தர, 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் களக்காடு, கள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் சுதன்(31). இவர் வாங்கிய நிலத்தின் பட்டாவை, தன் பெயருக்கு மாற்றித் தரக்கோரி, கள்ளிக்குளம் வி.ஏ.ஓ., ராஜலிங்கத்திடம் (56) விண்ணப்பித்தார். இதற்காக ராஜலிங்கம், 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மனமில்லாமல், நெல்லை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் சுதன் புகார் கொடுத்தார். நேற்று, கள்ளிக்குளம் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், சுதனிடமிருந்து 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ., ராஜலிங்கத்தை கைது செய்தனர்; அவரது வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டது.
நன்றி நெல்லை நண்பர்கள் நியூஸ்

லஞ்சத்தை தவிர்க்க, 32 கேமராக்கள்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை நிகழ்வுகள் மற் றும் லஞ்சத்தை தவிர்க்க, 32 கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் முறை, தமிழகத்தில் முதன்முறையாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இங்கு 2,266 உள்நோயாளிகளும், 8,000 புறநோயாளிகளும் தினமும் சிகிச்சை பெறுகின்றனர். 2,200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சிலர் பணிக்கு வந்ததும் கையெழுத்து போட்டுவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறி விடுகின்றனர். சில ஊழியர்கள் லஞ்சம் வாங்கவே பணிபுரிகின்றனர். சமீபத்தில், லஞ்சஒழிப்பு போலீசாரிடம் சில ஊழியர்கள் பிடிபட்டனர். இதை கட்டுப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக, பணி நேரத்தில் ஊழியர்கள் மருத்துவமனையில் இருக்கும் வகையில், 80 ஆயிரம் ரூபாய் செலவில் நான்கு தானியங்கி விரல் ரேகைப் பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

நேற்று முதல் அலுவலக பணியாளர்கள் விரல் பதிவு செய்கின்றனர். மருத்துவமனையில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், ஊழியர்களை கண்காணிக்கவும், 4.20 லட்சம் ரூபாயில் டீன் அறை பகுதி, மகப்பேறு, வெளிநோயாளிகள் பிரிவு, பிரேத அறை, அவசர சிகிச்சைப் பிரிவு, ஏ.ஆர்.டி., சென்டர், கைதிகள் வார்டு, ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கும் பகுதிகள் உட்பட 32 இடங்களில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்பணியை, மதுரை பினீக்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் செய்து கொடுத்துள்ளது.

உரிமையாளர் மாரியப்பன் கூறுகையில், ""காலை 8 முதல் இரவு 7 மணி வரை பதிவு செய்யப்படும். டீன் சிவக்குமார் தனது அறையிலிருந்தும், வீட்டில் இருந்தும் கண்காணிக்க முடியும். சமீபத்தில் வெள்ளோட்டம் பார்த்த போது, லஞ்சம் வாங்கிய ஊழியர் மற்றும் சமையல் கூடத்தில் முட்டைகளை சாப்பிட்ட ஊழியர் பிடிபட்டனர். விரைவில், சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் சுப்புராஜ் ஆகியோர் தங்கள் அறையிலிருந்து இன்டர்நெட் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இது ஒரு இ மெயில் நியூஸ்

காந்தி ஜெயந்தியன்று கை நீட்டிய சுகாதார ஆய்வாளருக்கு ஆப்பு

சென்னை: சம்பள உயர்வு வாங்கித் தர, துப்புரவுத் தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய, மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். வடபழனி பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் (48); அண்ணாநகர் 74வது கோட்ட மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்.

இவரது மேற்பார்வையில் 60க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளிகள் அண்ணாநகர் பகுதியில் பணிபுரிந்து வருகின்றனர்.சாமுவேல்தான் அவர் கள் வேலை செய்யவேண்டிய இடம், விடுமுறை வழங்குவது போன்ற பணி யை செய்துவருகிறார். அவர்களது பணி பதிவேட் டினை (சர்வீஸ் ரிஜிஸ்டர்) கையாண்டு வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரைச் சேர்ந்தவர் மணவாளன்(45).தினமும் அங்கிருந்து அண்ணாநகர் வந்து, துப்புரவுப் பணி செய்து வருகிறார். கடந்த சில மாதங் களாக உடல்நிலை சரியில்லாததால், வேலைக்கு வரவில்லை. சில நாட்களுக்கு முன்னர், மீண்டும் வேலைக்கு வந்தார்.

அப்போது, அவருக்கு ஆறாவது சம்பளக் கமிஷன்படி, நான்கு மாதமாக ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என்பதும், சர்வீஸ் ரிஜிஸ்டரில் பதியாததே அதற்கு காரணம் என்பதும் தெரியவந்தது. உடனே, சாமுவேலை அணுகி, தனக்கு ஊதிய உயர்வு வாங்கித் தரும்படி கேட்டார். முதலில் மறுத்து சாமுவேல், 2,500 ரூபாய் கொடுத்தால் சர்வீஸ் ரிஜிஸ்டரில் பதிவு செய்து, மண்டல அலுவலகத்திற்கு அனுப்புவதாக கூறினார். "தான் வாங்கும் ஒரு மாதச்சம்பளத்தை எப்படி தரமுடியும்' என்று தனது வறுமை நிலையை மணவாளன் கண்ணீருடன் எடுத்துக் கூறினார். சற்றும் மனமிரங்காத சாமுவேல், "பணம் கொடுத்தால் தான் உனக்கு சம்பள உயர்வு' என்று, கறாராக கூறிவிட்டார்.

அதனால், மனமுடைந்த மணவாளன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில், தனிப்படை அமைக்கப் பட்டது. நேற்று காந்திஜெயந்தியை முன்னிட்டு, அரசு அலுவலகங்கள் விடுமுறை என்றாலும், அத்தியாவசிய பணி என்பதால், துப்புரவுப் பணியாளர்களுக்கு விடுமுறை கிடையாது. எனவே, லஞ்சத்தை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள கோட்ட அலுவலகத்திற்கு வந்து தருமாறு, சாமுவேல் கூறினார்.

ரசாயனம் தடவிய 2,500 ரூபாய் பணத்தை மணாளன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த தனிப்படையினர் சாமுவேலை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், லஞ்சப்பணம் தவிர, நூறு, ஐநாறு என 4,500 ரூபாயை சாமுவேல் வைத்திருந்தார். அப்பணம் முழுவதும் துப்புரவுத் தொழிலாளிகள் தனக்கு "அன்பளிப்பாக' அளித்ததாக கூறினார். தெருவைக் கூட்டும் துப்புரவுப் பணியாளர்களிடம் தினந்தோறும் லஞ்சம் வாங்குவதை பெருமையாக அவர் கூறியதைக் கேட்டு, தனிப்படையினர் தலையில் அடித்துக் கொண்டனர்

ரத்ததானம் செய்வதில் தமிழகம் 2வது இடம்

தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும், சென்னை மாநகராட்சி எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கமும் இணைந்து, தேசிய தன்னார்வ ரத்ததான நாள் நிகழ்ச்சியை, சென்னையில் நேற்று நடத்தியது. எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் விஜயகுமார் வரவேற்றார். தமிழகத்தில் 160 முறை ரத்த தானம் செய்த ராயப்பேட்டையைச் சேர்ந்த பி.ஏ.கே.பி.ராஜசேகரன் மற்றும் அதிக அளவில் ரத்ததானம் பெற்ற அரசு மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்தியாவில் அதிக அளவில் ரத்ததானம் செய்வதில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் தமிழகம் இருக்கிறது.

தமிழகம் முதலிடம் வர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சி செய்ய வேண்டும். 2002ம் ஆண்டு 57 சதவீத அளவு ரத்ததானம் என்று இருந்தது. தற்போது 89 சதவீதமாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் இது 100 சதவீதமாக உயரும். ராஜசேகரன் 160 முறை ரத்தம் கொடுத்து இன்று 161 முறையாக ரத்தம் கொடுத்துள்ளார். அவர் மட்டுமல்ல அவரது மகன் 35 தடவையும், மகள் 32 தடவையும் ரத்த தானம் செய்துள்ளனர். நானும் இதுவரை 40 முறை ரத்ததான செய்துள்ளேன். அதாவது, துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதியும், முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியும் கண்டிப்பாக ரத்ததானம் செய்கிறேன். இவ்வாறு மேயர் பேசினார். மாநகராட்சி எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சங்க கூடுதல் திட்ட இயக்குனர் டாக்டர் குகானந்தம் நன்றி கூறினார்.






பள்ளிக்கூடம் போ‘கலாம்
பகுத்தறிவை வளர்க்‘கலாம்
நல்ல பாடம் படிக்‘கலாம்’
நல்லறிவை வளர்க்‘கலாம்..!’

தாய்த் தமிழை கற்‘கலாம்’
தரணி போற்ற வாழலாம்
ஆங்கிலத்தைக் கற்‘கலாம்’
அகிலம் முழுக்க சுற்றலாம்..!

கணக்குப் பாடம் கற்‘கலாம்’
கணிதப் புலி ஆ‘கலாம்’
அறிவியலைக் கற்‘கலாம்’
அறிவில் சிறந்து நிற்‘கலாம்..!’

வரலாற்றைப் படிக்‘கலாம்’
முன்னோர் வழி நடக்‘கலாம்’
புவியியலைப் படிக்‘கலாம்’
புதியனவற்றைப் படைக்‘கலாம்..!’

அறிவியல் தமிழ் கற்‘கலாம்’
அண்டத்தை அறியலாம்
கணிப்பொறியைக் கற்‘கலாம்’
புது கண்டுபிடிப்புகள் செய்யலாம்..!

இவைகளனைத்தும்
செய்து விட்டால் நாமும்
அப்துல் ‘கலாம்’ ஆ‘கலாம்’
நாடு போற்ற வாழலாம்..!

நன்றி; -மோ. கணேசன்

வியாழன், 1 அக்டோபர், 2009

அனைவருக்கும் எங்களது நன்றி

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

எனது சகோதரர் கலீல் ரஹ்மான் அவர்களின் மறைவால் எங்களுக்கு ஏற்பட்ட பெருஇழப்பிற்க்கு, எங்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த நண்பர்கள் மற்றும் ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.

எனது சகோதரர் கலீல் ரஹ்மான் மறுமைப்பேறு சிறக்கவும், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் யாசின் ஓதி துவா செய்ய அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

அன்புடன்,
A.S.ஹமீது.

LinkWithin

Blog Widget by LinkWithin