செல்போனை சார்ஜ் போட மறந்து விட்டோமே என்று இனி வருத்தப்படத் தேவையிருக்காது. பேட்டரி மின்சாரம் இல்லாமலேயே நமது உடல் அசைவின் மூலம் சார்ஜ் ஆகக் கூடிய தொழில்நுட்பத்தை ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்வி நிறுவன பேராசிரியர் ஸாங் லின் வாங் கண்டுபிடித்துள்ளார்.
இந்த தொழில்நுட்பம் நானோ ஜெனரேட்டர் என அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ஸிங்க் ஆக்ஸைடு மற்றும் நானோ வயர் மனித உடல் அசைவு இதயத்துடிப்பு இரத்த ஒட்டம் மற்றும் காற்றின் அவைவுகள் ஆகியவற்றிலிருந்து மின் ஆற்றலை சேமிக்கும் திறன் வாய்ந்தது
இந்த சாதனத்தை செல்போன் ஐபாட் பிளாக்பெரி செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் பொருத்தி விட்டால் நம்முடைய உடல் இயக்கத்தின்போது ஏற்படும் சிறு அதிர்வுகள் அசைவுகளிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரி பொருத்தத் தேவையில்லை. சார்ஜ் போடவேண்டிய அவசியமும் இல்லை.
இந்த தொழில் நுட்பம் ராணுவம் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் கண்காணிப்பு உயிர் மருத்துவ அறிவியல் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் என ஆராய்ச்சியாளர் வாங் தெரிவித்துள்ளார்.
நன்றி தினக்கரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக