பெங்களூர்: ஜிமெயில் மூலம் இனி இந்திய மொழிகளிலும் இமெயில்களை அனுப்பலாம்.
ஜிமெயில் சேவை இப்போது 5 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. அதே சேவை ஒன்இந்தியா மெய்லிலும் கிடைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இணையத்தை மிக அதிக அளவு பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி நீண்ட காலமாகிவிட்டாலும், இந்திய மொழிகளில் இமெயில் சேவை கிடைக்காமலே இருந்தது. இதுபற்றி பயன்பாட்டாளர்கள் பரவலாக குறைகூறி வந்தனர்.
இப்போது அந்தக் குறையைப் போக்கும் விதமாக இந்திய மொழிகளில் மெயில் எழுதும் வசதியை ஜிமெயில் மற்றும் ஒன்இந்தியா ஆகியவை அளித்துள்ளன.
இதன்படி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி எழுதியை (transliteration) கூகுள் ஆக்டிவேட் செய்துள்ளது. இதே வசதி ஒன்இந்தியாவிலும் கிடைக்கிறது.
முன்பு ஜிமெயில் மற்றும் ஒன் இந்தியாவில், இந்திய மொழிகளில் வரும் மெயில்களைப் படிக்க முடிந்ததே தவிர, அந்த மொழியில் எழுத முடிந்ததில்லை.
இப்போது அந்தக் குறையும் தீர்ந்துவிட்டது. இந்த 5 மொழிகளுள் ஒன்றில் மெயில் எழுத விரும்புவோர், செட்டிங்ஸ் பகுதியில், மொழியைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் மொழித் தேர்வுக்கு ஏற்பட கீ போர்டு அமைப்பும் தெரியும். உங்கள் தாய் மொழியிலேயே மெயில்களை எழுதி அனுப்பி மகிழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக