உலகின் முதல்நிலை கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் இந்த ஆண்டு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே எச்1பி விசாவுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்களில் காலியாக உள்ள வோலைகளுக்கு அமெரிக்கர்களுக்கே முதலிடம் என்ற ஒபாமாவின் வேலைவாய்ப்புக் கொள்கையை முழுமையாக இல்லாவிட்டாலும், முடிந்தவரை அமலாக்குவதில் முனைப்பு காட்டத் துவங்கியுள்ளன அமெரிக்க நிறுவனங்கள்.
எனவே வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்கா வந்து பணியாற்றத் தேவையான எச்1 பி விசாவுக்கு விண்ணப்பிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்ல... ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள் விசா காலம் முடிந்ததும் கட்டாயம் அமெரிக்காவிலிருந்து வெளியேறியே தீர வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. இவர்களது விசாக்களை இந்த ஆண்டு எந்த நிறுவனமும் புதுப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடி துறையில் முதல்நிலையில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் இம்முறை எச் 1 பி விசா கேட்டு மிகமிகக் குறைந்த விண்ணப்பங்களையே அளித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜெனரல் கவுன்சல் பிராட் ஸ்மித், முதல் நிலை நிறுவனமான மைகேரோசாப்டை மற்ற நிறுவனங்களும் இந்த விஷயத்தில் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
"கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த எச்1பி விசா வேண்டி ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன. அவற்றில் பாதி, ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் விசாவை நீட்டிப்பதற்காக வந்தவை.
ஆனால் இப்போது, அந்த மாதிரியான விசா நீட்டிப்பு விண்ணப்பங்களே இல்லை. தவிர, புதிதாக வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு எடுக்க முன்பு விண்ணப்பித்ததில் 10-ல் ஒரு பங்கு அளவு விசா விண்ணப்பங்கள் கூட இந்த முறை வரவில்லை. அமெரிக்க அரசின் புதிய விசா கட்டுப்பாடுகளை அனைத்து நிறுவனங்களும் உடனடியாக பின்பற்றத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்கிறார் ஸ்மித்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக