வியாழன், 19 மார்ச், 2009

செந்தூர் எக்ஸ்பிரசுக்கு தேர்தல் ஆணையம் தடை

திருச்செந்தூரில் இருந்து தலைநகர் சென்னை வரை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் வாரத்துக்கு ஐந்து நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

திருச்செந்தூரில் இருந்து தலைநகர் சென்னை எழும்பூர் வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சமீபத்தில் துவக்கி வைத்தார். அப்போது அவர் இத்திட்டம் விரைவில் வாரத்துக்கு 5 நாட்களாக இயக்கப்படும் என்றார்.

இதையடு்த்து 5 நாட்கள் இயக்க தேவைப்படும் கூடுதல் பெட்டிகள் மற்றும் இதர வசதிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இதற்கு தேவையான பெட்டிகள் இல்லாததை அடுத்து இந்த ரயில் தொடர்ந்து வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இதற்கான கூடுதல் பெட்டிகள் திருச்செந்தூர் வந்து சேர்ந்தது. இதையடுத்து வரும் 19ம் தேதி முதல் இந்த ரயில் வாரம் 5 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் முன்பதிவு செய்ய வந்தனர். ஆனால், நேற்று முழுவதும், இன்றும் முன்பதிவு எதுவு் செய்யப்படவில்லை.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் புதிய திட்டங்கள் எதையும் அறிமுகம் செய்ய முடியாது. இதனால் செந்தூர் எக்ஸ்பிரசை வாரத்துக்கு 5 நாட்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னர் இந்த ரயில் வாரத்துக்கு 5 நாள் ஓடும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin