ஞாயிறு, 10 ஜனவரி, 2010

கடலோர கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு : மூன்றாம் கட்டமாக பணிகள் துவக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 3ம் கட்டமாக துவங்கப்படவுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 23ம் தேதிமுதல் 27ம் தேதிவரை அமைக்ப்பட்டுள்ள மையங்களில் கணக்கெடுப்பு அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.

போட்டோ மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்திட வரும் 15 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இரண்டாம்கட்ட கணக்கெடுப்பு பணியின் போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டுடன் குறிப்பிடப்பட்ட நாட்களில் மையத்தில் வந்து பதிவு செய்துகொள்ளவேண்டும்.

ஏற்கனவே நடத்தப்பட்ட கணக்கெடுப்பு பணியில் விடுபட்ட நபர்கள் இருந்தால் அவர்களும் தங்கள் வயது தொடர்பான ஆவணங்களுடன் வந்து கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் ஆஜாராகி உரிய விவரங்கள் அளித்தால் அவரது பெயர் அவரது குடும்பத்தினருடன் பதிவுகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin