ஸ்ரீவைகுண்டத்தில் மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் மறைவை ஒட்டி, அனைத்து கட்சியினரின் இரங்கல் ஊர்வலம் நடந்தது.சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சியின் தலைவருமான ஜோதிபாசுவின் மறைவை ஒட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த ஊர்வலத்திற்கு முருகன் தலைமை வகித்தார்.
திமுக.,நகர செயலாளர் பெருமாள், ஐ.என்.டி.யு.சி., தலைவர் சந்திரன், பா.ஜ.,கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜா, இளைஞரணி பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம், மதிமுக.,மாவட்ட துணைச் செயலாளர் காசிராஜன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, ஏரல் நகர செயலாளர் பெஸ்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுவாமிதாஸ், பெருங்குளம் ரவி, சண்முகசுந்தரம், சங்கர நாராயணன், தங்கவேல் மற்றும் அனைத்து கட்சியினர் ஜோதிபாசுவின் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
செய்தி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக