தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் பணிகள் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
÷மாவட்ட கிராம வாழ் மக்கள் நலச் சங்க தலைவர் எஸ். நயினார் குலசேகரன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு:
÷ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 69 வருவாய் கிராமங்கள் உள்ளன. அதன்படி 69 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் தற்போது 33 கிராம நிர்வாக அலுவர்களே பணியில் உள்ளனர். 36 வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
÷இதனால், ஒரு கிராம நிர்வாக அலுவலர் மூன்று அல்லது நான்கு கிராமங்களை சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக பல கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் வருவது கிடையாது. பல கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வாரகணக்கில் மூடிக்கிடக்கின்றன. மேலும், கிராம உதவியாளர்கள் பணி நேரங்களில் கிராமங்களில் இருப்பதில்லை.
÷இதன் காரணமாக பொதுமக்கள் எந்தவித சான்றிதழுக்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து வாங்க முடிவதில்லை. தங்கள் கிராம நிர்வாக அலுவலர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் உள்ளனர்.
÷இதைத்தவிர மாவட்டத்தில் 8 வட்டங்களிலும் 8 தலைமை நில அளவையர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், நான்கு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் 8 பேர் பார்க்க வேண்டிய பணிகளை 4 பேர் பார்க்க வேண்டியுள்ளது.
÷கோவில்பட்டி தலைமை நில அளவையரிடம் ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய வட்டங்களின் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர் பொறுப்பு ஒப்படைத்தப்பட்ட 4 மாதங்களில் ஒரு நாள் கூட ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு வந்ததில்லை.
÷இதனால், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மற்ற நில அளவையர்களும் சரியாக பணிக்கு வருவதில்லை.
இதனால், பணிகள் பெருமளவில் தேங்கியுள்ளன. இந்த பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, காலியான பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக