சனி, 12 டிசம்பர், 2009

சென்னையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு சோழிங்கநல்லூரில் நாளை நடக்கிறது.

இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 2வது மாநில மாநாடு சென்னை அருகே சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெறவுள்ளது.

கேப்டன் அமீர் அலி தலைமையில் நடக்கும் இம் மாநாட்டில் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. ஆய்வுக் கோவைகளை வெளியிடுகிறார். எல்.கே.எஸ்.சையது அகமது அதைப் பெற்றுக் கொள்கிறார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் இலக்கிய சுடர் விருதை வழங்குகிறார்.

மாலை நடக்கும் நிறைவு விழாவுக்கு இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச்செயலாளர் எஸ்.எம்.இதயதுல்லா தலைமை தாங்குகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்து கொண்டு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய உமறுப் புலவர் விருதை கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்குகிறார்.

மத்திய செய்தித்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை நெல்லை சதக் அப்துல்லா கல்லூரி தலைவர் டி.இ.எஸ்.பத்ஹூர் ரப்பானிக்கும், சதக் கல்லூரி தலைவர் எஸ்.எம்.ஹமீது அப்துல்காதருக்கும் வழங்குகிறார்.

11 பேருக்கு சமுதாய சுடர் விருதுகளை சபாநாயகர் ஆவுடையப்பன் வழங்குகிறார்.

கவிக்கோ அறக்கொடை நிதியை துபாஷ் தாஜூதீனுக்கு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி வழங்குகிறார். 15பேருக்கு இலக்கிய சுடர் விருது வழங்கப்படுகிறது.

விழாவில் இஸ்லாமிய இலக்கிய கழக துணைத்தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர் எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு ரூ.1 லட்சம் வழங்குவார். அதைக் கொண்டு அவரது பெயரில் தமிழ் ஆய்வுக்காக அறக்கட்டளை தொடங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin