வியாழன், 17 டிசம்பர், 2009

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் பத்து ஆண்டுகள் கனரக வாகனம் ஓட்டியவரை டிரைவராக வைக்க வேண்டும்.கலெக்டர் அறிவிப்பு


கல்லூரி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரி தங்கவேல், முதன்மை கல்வி அதிகாரி பிறைட்சேவியர், ஆர்.டி.ஓ குருதேவி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சந்திரசேகர், சத்தியமூர்த்தி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;

1. பள்ளி,கல்லூரி வாகனங்களில் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் பள்ளி குழந்தைகள் ஏற்றிச் செல்லப்படுகிறார்கள் என்பதை தெளிவாக எழுத வேண்டும்.

2. வாடகை வாகனம் என்றால் பள்ளி அல்லது கல்லூரி பணி என்று தெளிவாக எழுதிகாட்ட வேண்டும்.

3 கல்வி நிலையத்திற்கு சொந்தமான எந்த ஒரு பஸ்சும் அனுமதிக்கப்பட்ட இருக்கைக்கு மேலாக குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது.

4. முதலுதவிப் பெட்டி கண்டிப்பாக பள்ளி வாகனங்களில் வைக்க வேண்டும். பஸ்களின் ஜன்னல்களில் நீளவாட்டில் கிரீல் கம்பிகள் பொறுத்த வேண்டும்.

5. தீ அணைப்பான் கருவியும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரியின் பெயர், போன் எண் போன்றவை அதில் எழுதியிருக்க வேண்டும்.

6. கனரக வாகனம் பத்து ஆண்டுகள் ஓட்டிய, போக்குவரத்து தண்டனை முந்தைய காலத்தில் இல்லாதவரை மட்டுமே டிரைவாக பள்ளி வாகனத்திற்கு நியமிக்க வேண்டும்.

7. டிரைவர் எந்த காரணம் கொண்டும் செல்போன் பேசக் கூடாது.

இவ்வாறு கலெக்டர் பேசினார். வாகனங்கள் அனைத்தையும் வரும் 18ம் தேதிக்குள் ஆர்.டி.ஓ ஆபிசிற்கு கொண்டு வந்து ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin