செவ்வாய், 15 டிசம்பர், 2009

ஸ்ரீவையில், பா.ம.க தலைவர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்


ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு மேல்புறம் ராட்சத குழாய் அமைத்து தூத்துக்குடியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தக் கோரி,பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் தெற்கு ரதவீதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மருதூர்,ஸ்ரீவைகுண்டம்
அணைக்கட்டை தூர்வார வேண்டும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும், ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பாமக தலைவர் கோ.க.மணி, உழவர் பேரியக்க தலைவர் இல.சடகோபன்,தனித் தமிழர் சேனை நிறுவனர் நகைமுகன்,மாநில இளைஞரணி செயலர் அன்பழகன்,தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன்,பாமக மாநில பொதுச்செயலர் உஜ்ஜல்சிங்,மாவட்ட செயலர் இசக்கியப்பன்,ஒன்றிய செயலர் வள்ளி நாயகம்,நகர செயலர் பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாமக மாநில கொள்கை விளக்க அணி செயலர் அ.வியனரசு செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin