ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
புதன், 21 அக்டோபர், 2009
துபாயில் இந்திய எம்பிக்கு வரவேற்பு நிகழ்ச்சி
துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் சார்பில் ஹைதராபாத் லோக்சபா உறுப்பினர் ஆசதுதீன் உவைஸிக்கு வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டன. துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் தலைவர் கலீல் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் பல்வேறு சமூகப் பிரச்சனைகளில் லோக்சபாவில் ஆசதுதீன் உவைஸி திறம்பட பணியாற்றி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் பி.டி. அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆசதுதீன் உவைஸி எம்.பி. தனது ஏற்புரையில் பொருளாதாரத்தின் பின் தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னால் இயன்ற பணிகளை மேற்கொள்வேன் எனவும், தனக்கு வரவேற்பு அளித்து கௌரவப்படுத்தியமைக்கும் நன்றி தெரிவித்தார்.
சல்மான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், கும்பகோணம் ஜாஹிர் உசேன், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தகவல்: துபாயிலிருந்து முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக