உலகின் பணக்கார நகரங்களில் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. செலவுமிக்க இநநகரங்களை ஒப்பிடுகையில் இந்திய நகரங்கள் எவ்வளவோ சிக்கனமானவையாம். குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை ஆகியவை செலவு குறைவான நகரங்களாக இருக்கின்றன. இவை முறையே 70 ஆவது, 73 ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.
ஆசியாவைப் பொறுத்தவரையில் செலவுமிக்க நகரங்களில் டெல்லி 41, மும்பை 43, சென்னை 44, பெங்களூரு45, ஐதராபாத் 46, புணே47, கொல்கத்தா 49 ஆகியவை இடம் பெறுகின்றன்.
சமீபத்தில் UBS என்ற அமைப்பு 73 சர்வதேச நகரங்களை வைத்து எடுத்த ஆய்வில் கோபன்ஹேகன், ஜூரிச், ஜெனிவா மற்றும் நியூயார்க் நகரத் தொழிலாளர்கள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அத்தியாவசியத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு கேட்கப்பட்ட 154 கேள்விகளை வைத்து இந்த முடிவுக்கு வரப்பட்டுள்ளது.
UBS அமைப்பின் ஆய்வு முடிவின் படி உலகின் முதல் பத்து பணக்கார, செலவுமிக்க நகரங்கள் வருமாறு:
கோபன்ஹேகன் (டென் மார்க் தலைநகரம்) -

ஜூரிச் (சுவிட்சர்லாந்தின் பொருளாதார கேந்திரம்)

ஜெனிவா(சுவிட்சர்லாந்து)

நியூயார்க்(அமெரிக்கா)

ஆஸ்லோ (நார்வே)

லாஸ் ஏஞ்சலஸ்(அமெரிக்கா)

மூனிச் (ஜெர்மனி)

லக்ஸம்பெர்க்

பிராங்ஃபர்ட்(ஜெர்மனி)

டப்ளின் (அயர்லாந்து)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக