பஹ்ரைன் நாட்டில் வேலை கிடைப்பதாக நம்பிச் சென்று, ஏமாந்த 7 இந்தியர்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர் .
கடந்த சனிக்கிழமையன்று பஹ்ரைன் சர்வதேச விமானநிலையத்தில் 7 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கேரளத்தைச் சேர்ந்த இந்த 7 பேரும், பஹ்ரைனில் ஹாலா இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தில் வேலை செய்வதற்காக பஹ்ரைனில் வாழும் இந்தியர் ஒருவர் மூலம் விசா பெற்றனர்.
பஹ்ரைன் வந்து சேர்ந்தபின் ஹாலா எனும் நிறுவனம் இல்லையென்றும், தாங்கள் ஏமாற்றுப்பட்டுவிட்டோம் என்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது.
இந்நிலையில் பஹ்ரைன் போலீஸôர் போலி விசாவில் வந்தமைக்காக அவர்களைக் கைதுசெய்தனர்.
பஹ்ரைனில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஜோசப் ஜார்ஜ் நடவடிக்கை எடுத்ததன்பேரில் அவர்கள் 7 பேரும் தாயகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
சமீப காலமாக வெளிநாடுகளில் வேலைதேடுவோர். இதுபோன்று போலி விசாக்களால் ஏமாற்றப்படுவது அதிகரித்துவருகிறது. இதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தூதரகம் எடுத்துவருகிறது என்றார் ஜோசப் ஜார்ஜ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக