புதன், 2 செப்டம்பர், 2009

இன்றைய வசனம்-நோன்பு

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியருடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்களின் கால்(நரம்பு) பிசகியிருந்தது. அவர்கள் ஒரு பரணில் இருபத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அப்போது அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஒரு மாதம் என்று சத்தியம் செய்யவில்லையா!' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!" என்றார்கள்.

Volume:2 Book:30

1912. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது." என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

Volume:2 Book:30

1913. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.


Volume:2 Book:30

1914.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

<>
Volume:2 Book:30

1915.பராஉ(ரலி) அறிவித்தார். (ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) நோன்பு நோற்றிருந்தார்; நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, 'உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?' என்று கேட்டார்; அவரின் மனைவி, 'இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகிறேன்!" என்றார். கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டுவிட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, 'உமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது' என்றார் நண்பகலானதும் கைஸ்(ரலி) மூர்ச்சையுற்றார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது, 'நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும் 'இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்ற வசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.


1916. அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார். 'கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை' என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!" என்று பதிலளித்தார்கள்.

Volume:2 Book:30

1917. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். "கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!" என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. 'இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்" என்று அப்போதுதான் மக்கள் விளங்கினர்!" (பார்க்க: 590ல் உள்ள02:187ம் எண் இறைவசனத்தின் மொழியாக்கம்)

Volume:2 Book:30

1918. ஆயிஷா(ரலி) இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்தார். பிலால்(ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தாம் ஃபஜ்ரு (கைவறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!" என்று குறிப்பிட்டார்கள். "அவர் பாங்கு சொல்லிவிட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இரண்டு பாங்குக்குமிடையே பெரிய இடைவெளி இருக்காது!" என்று காஸிம்(ரஹ்) கூறினார்.

Volume:2 Book:30

1920.ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். "நான் என் குடும்பத்தாருடன் ஸஹ்ர் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களுடன் (ஸுப்ஹுத்) தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin