சுவிட்சர்லாந்தில் மஞதிகள் உருவாக்கப்படுவதற்கு சில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மசூதி அமைப்பதனை தடுக்கும் வகையில் தடையுத்தரவு கொண்டு வரப்பட வேண்டுமென வலதுசாரி கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என சமய அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 29ம் திகதி மசூதி அமைப்பது தொடர்பாக நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவுள்ளது.
முஸ்லிம் சமூகத்தை ஒதுக்கக் கூடாது எனவும் அவர்களையும் சகோதரர்களைப் போன்று நடத்த வேண்டுமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சமய சுதந்திரம் என்பது சர்வதேச ரீதியான அடிப்படை மனிதஉ உரிமைகளில் முக்கியமானதென அவர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் மொத்தமாக 4 மசூதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக