புதன், 23 செப்டம்பர், 2009

சுவாமி நெல்லையப்பர் பிரதான சாலையில் அரசு மதுக் கடை அமைக்க எதிர்ப்பு


திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் பிரதான சாலை பகுதியில் அரசு மதுக் கடை அமைக்கக் கூடாது என, அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆட்சியரிடம் அச் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: சுவாமி நெல்லையப்பர் கோயில் பிரதான சாலையில் உள்ள எம்.பி.எம். வணிக வளாகம் அருகே புதிதாக அரசு மதுக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. அந்த இடத்தைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட வாகனப் பழுதுநீக்கும் தொழில்நிறுவனங்கள் உள்ளன. அங்கே மதுக் கடை அமைத்தால் தொழிலாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையூறு ஏற்படும்.

சில தினங்களுக்கு முன்பு அங்கு மதுக் கடை அமைக்க ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்றன. அப்போது கழிவுகளை எரித்தபோது தீவிபத்து நேரிட்டது.

அருகே அரசின் உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கும் உள்ளது. மேலும், தொழில் செய்யும் இடத்தில் மதுக் கடை அமைத்தால் அது பல்வேறு வகைகளில் இடையூறாக இருக்கும்.எனவே, தொழில் மற்றும் தொழிலாளர்களின் நலன்கருதி அரசு மதுக் கடைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin