புதன், 16 செப்டம்பர், 2009

"முஸ்லிம்களிடம் அமெரிக்கா நல்ல அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது'

முஸ்லிம்களிடம் நல்ல அணுகுமுறையையே அமெரிக்கா கடைப்பிடிக்கிறது என தில்லியில் உள்ள அமெரிக்க மையத்தின் கலாசார பிரிவு அலுவலர் நிக் நம்பா தெரிவித்தார்.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் அமெரிக்கத் தூதரகம், அக் கல்லூரி நிர்வாம் இணைந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தின.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிக் நம்பா மேலும் பேசியதாவது:

இந்தியாவில் தில்லி, கோல்கத்தா, மும்பை, சென்னை போன்ற பெரிய நகரங்களில் இந் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என, இங்கு நடத்துகிறோம்.

ஒரு ஹோட்டல் ஊழியரிடம் பேசும்போது, அமெரிக்காவை விரும்புவதாகவும், அந் நாட்டு அரசை விரும்பவில்லை என்றும் கூறினார்.

ஆனால் அமெரிக்க அரசு முஸ்லிம்களிடம் நல்ல அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கிறது என்றார் நிக்நம்பா.

நிகழ்ச்சியில் அமெரிக்காவின் "காமன் காஸ்' தொண்டு நிறுவனத்தின் பிரசார பிரிவு இயக்குநர் லாரன் கொலட்டாவும் பேசினார்.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி தலைமை வகித்தார்.

கல்லூரித் தலைவர் பி.எஸ்.ஏ. பல்லாக் லெப்பை, சாரதா கல்லூரித் தாளாளர் சுவாமி சங்கரானந்தா, அருள்தந்தை ஜமீல்ஸ் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முஸ்லிம் அனாதை நிலையச் செயலர் நைனாமுகமது, எஸ். அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin