செவ்வாய், 15 செப்டம்பர், 2009

ஒரு படுக்கையறை ஃப்ளாட் ஹாங்காங்கில் 3.16 மில்லியன் டாலருக்கு விற்பனை


ஹாங்காங்கில் ஒற்றைப் படுக்கையறை கொண்ட ஃப்ளாட் 3.16 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.15.16 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் ஸிம்-ஷா ஸுய் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 64 மாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் அமைந்துள்ள 54வது மாடியில் உள்ள ஒற்றைப் படுக்கையறை கொண்ட ஃப்ளாட், அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதால் நிலம், வீடு விற்பனையில் ஏற்பட்ட மந்தநிலை மாறிவிட்டதாக கருதப்படுகிறது.

மொத்தம் 75.8 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இந்த ஃப்ளாட்டில் 54.8 சதுர மீட்டர் மட்டுமே குடியிருப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சௌத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ள பகுதி பரபரப்பானது என்பதாலும், அந்த ஃப்ளாட்டில் இருந்து பார்த்தால் விக்டோரியா துறைமுகம் அழகாக தெரியும் என்பதாலும், ஒரு சதுர மீட்டருக்கு 42 ஆயிரம் டாலர் விலை நிர்ணயம் செய்து அந்த ஃப்ளாட்டை ஹாங்காங் தொழிலதிபர் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin