புதன், 23 செப்டம்பர், 2009

சென்னை-ரூ.5.5 கோடி சீன பொம்மைகள் பறிமுதல்!

ரூ.5.5 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட சீன பொம்மைகளை சென்னையில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தியாவில் சீன பொம்மைகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள தனியார் கண்டெய்னர் நிறுவனத்தில் தடையை மீறி இந்தப் பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் சென்று கண்டெய்னர்களை சோதனை செய்தனர்.

சீனாவில் இருந்து சட்ட விதிகளுக்கு புறம்பாக உரிய ஆவணங்கள் இல்லாத குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவைகளின் மதிப்பு சுமார் ரூ.5.5 கோடி.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுங்கத்துறை ஆணையர் ராஜன், "கடந்த சில நாட்களாக கண்டெய்னரில் உள்ள பொருட்களை சோதனை செய்து வருகிறோம். இங்கு வந்துள்ள சீனா பொம்மைகளுக்கு விலாசம் மற்றும் ஏனைய ஆவணங்கள் இல்லை. மேலும், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகியும் இந்த பொம்மைகளை பெற்றுக் கொள்ள யாரும் வரவில்லை. மேலும் பல கண்டெய்னர்களை சோதனை செய்யப் போகிறோம்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin