தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகளை இயக்க, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
சென்னையில் இருந்து மட்டும் தினமும் 900 விரைவு பேருந்துகள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதுதவிர தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இதர போக்குவரத்துக் கழகங்களிடம் இருந்து சுமார் 300 "அல்ட்ரா டீலக்ஸ்' பேருந்துகளை பெற்று இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர், தாம்பரம், பிராட்வே பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் விரைவு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யலாம்.
இதற்கான தொலைபேசி எண்- 24794709, 24794705.
இதே போல தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் உள்ள 33 மையங்களிலும் முன்பதிவு செய்யலாம். 43 அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக