சனி, 19 செப்டம்பர், 2009

தூர்தர்ஷனுக்கு வயது 50!

இந்திய தொலைக்காட்சியான தூர்தர்ஷன் துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதன் பொன் விழா ஆண்டையொட்டி (1959-2009), சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன்,

தூர்தர்ஷன் சேனலை தொலைக்காட்சி வைத்திருக்கும் 91 சதவீத இந்தியர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இதன் 30 சேனல்களை 35 கோடி மக்கள் பார்த்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு 7 கோடி மக்களைத்தான் சென்றடைகிறது. நடுநிலையுடன் நாட்டு நடப்புகளை மக்களுக்கு புகட்டும் ஆசிரியராக தூர்தர்ஷன் விளங்குகிறது. பல சேனல்களில் செய்திகள் வாசிக்கப்பட்டாலும், பொதிகை சேனல் தான் உண்மையான செய்திகளை தருகிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய, புகழ் வாய்ந்த சேனல் தூர்தர்ஷன்தான். மகாபாரதம், ராமாயணம் ஆகிய இதிகாசங்களை தத்ரூபமாக ஒளிபரப்பியது. பண்பாட்டை காக்கும் ஒரே நிறுவனம் தூர்தர்ஷன்தான் என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தூர்தர்ஷன் ஓய்வு பெற்ற தலைமை துணை இயக்குனர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற தலைமை என்ஜினீயர் என்.எஸ்.கணேசன், கர்நாடக இசை கலைஞர் எம்.பாலமுரளி கிருஷ்ணா, நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin