சனி, 19 செப்டம்பர், 2009

தீபாவளி-5 நிமிடத்தில் முடிந்த 11 ரயில்களின் முன்பதிவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை- சென்னை இடையே 11 அதிவிரைவு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐந்தே நிமிடத்தில் முடிந்தது. இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடும் இழுத்தடிப்புக்குப் பிறகு மதுரை-சென்னை இடையே 11 அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே ஒருவழியாய் அறிவித்தது.

அதன்படி, அக்டோபர் 14ம் தேதி நாகர்கோயில்- சென்னை சென்ட்ரல் (வண்டி எண்-0605).

அக்டோபர் 15ம் தேதி நாகர்கோயில்- சென்னை சென்ட்ரல் (0606).

அக்டோபர் 15ம் தேதி மதுரை- சென்னை சென்ட்ரல் (0631).

அக்டோபர் 16ல் சென்னை சென்ட்ரல்- மதுரை (0632).

அக்டோபர் 17ம் தேதி மதுரை- சென்னை சென்ட்ரல் (0671).

அக்டோபர் 18ம் தேதி நாகர்கோயில்- சென்னை சென்ட்ரல் (0648).

அக்டோபர் 18ம் தேதி சென்னை சென்ட்ரல்- மதுரை (0672).

அக்டோபர் 19ம் தேதி திருநெல்வேலி- சென்னை எழும்பூர் (0618).

அக்டோபர் 19ம் தேதி சென்னை சென்ட்ரல்- நாகர்கோயில் (0645).

அக்டோபர் 20ம் தேதி நாகர்கோயில்- திருச்சி (0656) என மொத்தம் 11 அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு துவங்கி 8.05 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இ-டிக்கெட் மூலம் முன்பதிவு நடப்பதாலும், புரோக்கர்கள் தலையீட்டாலும் முன்பதிவு 5 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin