திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்குகின்றன.
இது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையர் முனைவர் கே.எஸ்.பி. துரைராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் இளைநிலை பட்டக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கும். முதுநிலை பட்ட வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நவம்பர் 11 ஆம் தேதி தொடங்கும்.
தனித்தேர்வர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அதற்கான தேர்வுக்கட்டணத்துடன் இம் மாதம் 21 ஆம் தேதிக்கு முன்பாக பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும் என்றார் தேர்வாணையர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக