தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குட்பட்டு, மத்திய கண்காணிப்பு ஆணையம் ஊழல் வழக்கில் குற்றம்சாற்றப்பட்டு, அபராதம் விதிக்கப்பெற்ற அல்லது தண்டனை பெற்ற 123 அரசு அதிகாரிகளின் பெயரை முதல்முறையாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே லஞ்ச ஊழல் புரிந்த அதிகாரிகளின் எண்ணிக்கையையும், அவர்கள் பணிபுரியும் துறைகள் பற்றியும் மட்டுமே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது முதல்முறையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் விவரங்கள் கண்காணிப்பு ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தண்டனை பெற்றவர்களா? அல்லது வழக்கு விசாரணை நடைபெற்று வரும் அதிகாரிகளா? என்பன போன்ற விவரங்களும் இடம்பெற்றுள்ளன. ஜூலை மாதத்தில் 101 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் 17 பேர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள். டேல்லி மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றும் 13 பேர், டெல்லி நகர்மன்றத்தில் பணியாற்றும் 11 பேரும் இவர்களில் அடங்குவர்.
விசாரணை நடைபெறும் 22 அதிகாரிகளில் உள்துறையைச் சேர்ந்த 7 பேரும், 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளும், மத்திய நேரடி வரிகள் வாரியத்தைச் சேர்ந்த 7 பேரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம், நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம், ஓ.என்.ஜி.சி ஆகியவற்றைச் சேர்ந்த 29 அதிகாரிகளுக்கு எதிராக மிக அதிகளவு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்புப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக