வெள்ளி, 18 செப்டம்பர், 2009

சென்னை போக்குவரத்துக் கழகத்திற்கு மேலும் 100 வோல்வோ பஸ்கள்


சென்னை: எம்.டி.சி என அழைக்கப்படும் சென்னைப் பெருநகரபோக்குவரத்து் கழகம், மேலும் 100 வோல்வோ சொகுசுப் பேருந்துகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 30 வோல்வோ பஸ்களை எம்டிசி புழக்கத்தில் விட்டுள்ளது. இந்த வகைப் பேருந்துகளுக்கு பயணிகளிடம் நல்லாதரவும், நல்ல வசூலும் கிடைத்திருப்பதால் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மேலும் 100 பஸ்களுக்கு தற்போது ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த 2007ம் ஆண்டு சென்னை மாநகரில் முதல் முறையாக வோல்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வோல்வோவுக்குக் குறையாத கிராக்கி...

பொருளாதார மந்த நிலை காணப்பட்ட நிலையிலும் கூட இந்தியாவில் வோல்வோ பேருந்துகளுக்கு கிராக்கி குறையவில்லை. இதனால் வோல்வோ நிறுவனம் நஷ்டத்தை சந்திக்காமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வோல்வோ நிறுவனம் 600 பேருந்துகளை டெலிவரி செய்யவுள்ளது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகமாகும்.

பெங்களூரில் உள்ள வோல்வோ பஸ் தொழிலகம் எந்தவித ஆள் குறைப்பும் இன்றி சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு மிகவும் செளகரியமாக இருப்பதால் வோல்வோ பஸ்களுக்கு கிராக்கி அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக டவுன் பஸ்களாக இவை தற்போது இயக்கப்பட ஆரம்பித்த பின்னர் இந்த வகை பஸ்களில் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஏசி வசதியுடன், செளகரியமாக,போக்குவரத்துசிக்கலைச் சந்திக்காமல் செல்ல முடிவதால் இந்த வகை பஸ்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

வோல்வோ டவுன் பஸ்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விரைவில் மிகப் பெரிய அளவில் வோல்வோ டவுன் பஸ்கள் சாலைகளில் ஓடும் நிலை உருவாகும் என வோல்வோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஓடும் வோல்வோ பஸ்கள் அனைத்துமே பெங்களூர் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

பஸ்களுக்கு இன்சூரன்ஸ்...

இந் நிலையி்ல் சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி,

தமிழகத்தில் அரசுப்போக்குவரத்து் கழகங்களால் 20,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளுக்குக் காப்பீடு செய்யப்படுவதில்லை.

அரசுப் போக்குவரத்து க் கழக பேருந்துகளால் ஏற்படும் விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் மிகுந்த கால தாமதமும், அதிக செலவும் ஏற்படுவதால், விபத்து தொடர்பான இழப்பீடுகளை பாதிக்கப் பட்டவர்கள் உடனடியாக பெறும்வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான பேருந்துகளைக் காப்பீடு செய்து கொள்ள அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin