திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மாணவர்களுக்கு பரிசுத் தொகை: ஆட்சியர் கோ.பிரகாஷ் வழங்கினார்


10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையை மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2008-09ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு அரசின் பரிசுத் தொகையை ஆட்சியர் பிரகாஷ் வழங்கினார்.

இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவியர்கள் 18 பேருக்கு ரூ.27ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin