சீன அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஜனநாயக ஆதரவாளர்கள் ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.
இவர்கள் கடந்த வருடம் சீன அரசால் கைது செய்யப்பட்ட 3 தொண்டர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஹூவாங் கி, தான் ஷூவோரென் மற்றும் சூ ஷியாங் என்ற 3 பேரும் சீன அரசின் பல்வேறு திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தமைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஹூவாங் கி, தான் ஷூவோரென் ஆகிய இருவரும் மே, 2008ல் சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் போது அரசின் மீட்பு நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசினர்.
வழக்கறிஞரான சூ ஷியாங், அரசின் கொள்கைகளுக்கு எதிரான பல வழக்குகளில் வாதாடினார். இதனால் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக