வியாழன், 6 ஆகஸ்ட், 2009

தூர்தர்ஷன் மற்றும் ஆல்இந்தியா ரேடியோவில் வேலைவாய்ப்பு!

தூர்தர்ஷன் மற்றும் ஆல்இந்தியா ரேடியோவில், 11 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, ராஜ்யசபாவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.


இது குறித்து, ராஜ்யசபாவில் பதிலளித்த தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் ஜாதுவா கூறியதாவது:

இன்ஜினியரிங் பிரிவில், ஆல் இந்தியா ரேடியோவில், 1,284 பணியிடங்களும்,

தூர்தர்ஷனில் 2,714 பணியிடங்களும் காலியாக உள்ளன.

அதே போல் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவில், ஆல் இந்தியா ரேடியோவில், 3,010 பணியிடங்களும்,

தூர்தர்ஷனில், 736 பணியிடங்களும் காலியாக உள்ளன.

செய்தி பிரிவில் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனில் முறையே 55 மற்றும் 39 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மொத்தமாக, ஆல் இந்தியா ரேடியோவில், 7,277 பணியிடங்களும்,

தூர்தர்ஷனில் 4,221 பணியிடங்களும், காலியாக உள்ளன.இவ்வாறு ஜாதுவா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin