வியாழன், 20 ஆகஸ்ட், 2009

நெல்லை மாநகராட்சியில் 'வடைக்கு தடை'!

" மாநகராட்சி கவுன்சிலர் மீது வடை வீசியதால் அடிதடி "


நெல்லை: அதிமுக கவுன்சிலர் மீது திமுக உறுப்பினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வடையை வீசி ரகளை செய்ததால், மாநகராட்சி உறுப்பினர்களுக்கு வடை தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் குடிநீர் குழாய் இணைப்பில் பெரும் பண மோசடி நடந்துள்ளதாக சமீபத்தில் நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.

அப்போது அதிமுக கவுன்சிலர் சுதா பரமசிவன் மீது திமுக கவுன்சிலர் பிரான்சிஸ் என்பவர் சாப்பிடக் கொடுத்த வடையை எறிந்து தாக்கினார். இதனால் பெரும் அமளி ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று நடந்த கவுன்சில் கூட்டத்தின்போது உறுப்பினர்களுக்கு வடை விநியோகிக்கப்படவில்லை. மாறாக, பிஸ்கட் மற்றும் சிப்ஸ் மட்டுமே தரப்பட்டது.

இதை தனது பேச்சில் சுட்டிக் காட்டிய சுதா பரமசிவன், என் மீது வடை எறியப்பட்டதால், வடைக்குப் பதில் சிப்ஸ், பிஸ்கட் கொடுத்த மேயருக்கு நன்றி என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin