ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
திங்கள், 10 ஆகஸ்ட், 2009
நெல்லையில் சீறிப் பாய்ந்த மாட்டு வண்டிகள்: தூத்துக்குடி முதலிடம்
முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டி போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் முதல் பரிசை தட்டிச் சென்றது.
முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு பாளை ஒன்றிய திமுக சார்பில், பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது. பாளை வி.எம். சத்திரத்தில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி போட்டியில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேனி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலியைச் சேர்ந்த வண்டிகள் போட்டியில் பங்குபெற்றன.
பெரிய மாட்டு வண்டி போட்டியை, நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியனும், சிறிய மாட்டு வண்டி போட்டியை அமைச்சர் மைதீன்கானும் துவக்கி வைத்தனர்.
போட்டி துவங்கியதும், மாட்டு வண்டிகள் கடும் வேகத்துடன் சீறிப் பாய்ந்தன. சுமார் 10கிமீ தூரம் வரை சென்ற இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் முருகன் என்பவரின் மாட்டு வண்டி முதலிடத்தை பிடித்தது. அமைச்சர் மைதீன்கான் அவருக்கு 86ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கினார்.
சிறிய மாட்டுவண்டி போட்டியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாரிவள்ளல் முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.57ஆயிரம் பரிசளிக்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நன்றி : செல்வா, திருநெல்வேலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக