திருநெல்வேலியில் உருது கடிதத்தோடு வந்த புறாவால் பரபரப்பு ஏற்பட்டது. அது நேர்த்திக் கடனுக்காக பறக்கவிடப்பட்டது என, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே வேன் நிறுத்துமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு புறா காலில் கடிதம் கட்டப்பட்ட நிலையில் நின்று கொண்டிருந்தது.
அதை சில வேன் டிரைவர்கள் பிடித்தனர். புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த கடிதத்தை அவர்கள் எடுத்துப் பார்த்தனர்.
அந்த கடிதம் உருது மொழியில் எழுதப்பட்டிருந்ததால், அவர்களால் படிக்க முடியவில்லை.
இந் நிலையில், தீவிரவாத இயக்கத் தொடர்புடைய யாரேனும் அந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த காவல் துறை அதிகாரிகள் அந்த புறாவையும், கடிதத்தையும் கைப்பற்றினர்.
போலீஸôர் விசாரணையின் முதல் கட்டமாக, அந்த கடிதத்தை உருது மொழி பேராசிரியர்கள் மூலம் மொழி பெயர்த்தனர். இதில் அந்த கடிதத்தில் "எல்லா புகழும் இறைவனுக்கே, இறைவன் ஒருவனே' என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இதையடுத்து, அந்த புறா எங்கிருந்து பறக்கவிடப்பட்டது என போலீஸôர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சில தர்ஹாக்களிலும், பள்ளிவாசல்களிலும் மக்கள் நேர்த்திக் கடனாக புறாக்களைப் பறக்க விடுவது தெரிய வந்தது. இதில் சிலர் புறாவின் காலில் கடிதத்தை கட்டி விடுவார்களாம். அப்படிதான் அந்த புறாவும் பறக்கவிடப்பட்டிருக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது அந்த புறா போலீஸôர் கண்காணிப்பில் உள்ளது.
மேலும், அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக