
இந்திய அரசியலில் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், பெரியார், காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவரும் சமுதாயத்தின் பெருந் தலைவராக விளங்கியவருமான காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிபின் வரலாறு கண்ணியத் தமிழர் என்ற பெயரில் ஆவணப்படமாக எடுக்கப்பட இருக்கிறது.
எஸ்.டி.கூரியர் நிறுவனத்தின் தலைவர் அன்சாரி தயாரிப்பில், ஆளூர் ஷாநவாஸ் இயக்கத்தில் ஆவணப் படம் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட உள்ளது.
இந்தியாவின் சிறந்த தலைவரை தமிழகத்தின் இன்றைய இளைய சமுதாயம் அறிந்துகொள்ள இந்த ஆவணப்படம் உதவியாக இருக்கும்.ஆளூர் ஷானவாஸ் ஏற்கனவே இட ஒதுக்கீடு பற்றி 'பிறப்புரிமை' என்ற பெயரிலும் ,மதானியை பற்றி 'ஒரு கைதியின் கதை' என்ற பெயரிலும் ஆவணப்படங்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக