வியாழன், 6 ஆகஸ்ட், 2009

சென்னை சென்‌ட்ரலி‌‌ல் இருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு இரயில்

சென்னை சென்‌ட்ரலில் இருந்து ஆக‌ஸ்‌ட் 12ஆ‌ம் தே‌தி‌ முத‌ல் சேலம், ஈரோடு வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு இரயிலை தெ‌ற்கு இர‌யி‌ல்வே இயக்கு‌கிறது.

இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை-தூத்துக்குடி இடையே 12 பெட்டிகள் கொண்ட வாராந்திர சிறப்பு இர‌யில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் சேலம், ஈரோடு, திண்டுக்கல், மதுரை வழியாக தூத்துக்குடியை சென்றடையும்.

சென்னை சென்‌ட்ரலில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு இரயில் (வண்டிஎண் 0611) பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், வாஞ்சி மணியாச்சி, மீளவிட்டான் வழியாக காலை 9.45 மணிக்கு தூத்துக்குடி இரயில் நிலையத்தை சென்றடையும்.

அதே போல தூத்துக்குடியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் இந்த வாராந்திர சிறப்பு இரயில் (வண்டிஎண் 0612) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்‌ட்ரலை வந்தடையும்.

இந்த வாராந்திர சிறப்பு இரயில் சென்னை சென்‌ட்ர‌லி‌ல் இரு‌ந்து தூத்துக்குடி‌க்கு (வண்டிஎண் 0611) ஆகஸ்‌ட் 12, 19, 26, செப்டம்பர் 2, 9, 16, 23, 30, அக்டோபர் 7, 14, 21, 28 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் இய‌க்க‌ப்படு‌கிறது.

தூத்துக்குடி‌யி‌ல் இரு‌ந்து சென்னை சென்‌ட்ரலு‌க்கு (வண்டிஎண் 0612) ஆகஸ்‌ட் 13, 20, 27, செப்டம்பர் 3, 10, 17, 24, அக்டோபர் 1, 8, 15, 22, 29 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் இய‌க்க‌ப்படு‌கிறது.

இந்த சிறப்பு இர‌யிலில் 2ஆம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 6, பொதுப்பெட்டிகள் 3, ஏ.சி. 2 அடுக்கு பெட்டி 1, ஏ.சி. 3 அடுக்கு பெட்டி 1 ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த வாராந்திர சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

நன்றி : சக்திவேல்,சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin