வியாழன், 6 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் முன்சீப் நீதிமன்ற வளாகத்தில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்


ஸ்ரீவைகுண்டம் முன்சீப் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவர்மன்றம் வியாழக்கிழமை (ஆக. 6) முதல் செயல்படுகிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கள்ளபிரான் சுவாமி கோயில் அருகேயும், மாவட்ட முன்சீப் நீதிமன்றம் வட்டாட்சியர் அலுவலக சாலையிலும் செயல்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் அனைத்து நீதிமன்றங்களும் ஒரே வளாகத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதற்கிடையே, நீதித்துறை நடுவர் நீதிமன்றக் கட்டடத்தின் பழுது மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக அதை இந் நீதிமன்றத்தை முன்சீப் நீதிமன்ற வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்துவந்தது.

ஸ்ரீவைகுண்டம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் மாடியில் செயல்பட்டு வருகிறது. கீழ்தளத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்படும். இதற்கான தொடக்க விழா தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ஆவடி தியாகராஜமூர்த்தி தலைமையில் நடைபெறும்.

முதன்மைக் குற்றவியல் நீதிபதி பரமராஜ், ஸ்ரீவைகுண்டம் மாவட்ட முன்சீப் சந்தோஷ், நீதித்துறை நடுவர் (பொறுப்பு) ஜோசப்ஜாய் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் துரைராஜ், செயலர் பெருமாள்பிரபு, வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin