வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

மனித வெடிகுண்டு தாக்குதலில் சவுதி இளவரசர் காயம்

அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சவுதி அரேபிய இளவரசர் முகமத் பின் நயீஃப் காயத்துடன் உயிர் தப்பினார்.

ஜெட்டா நகரில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த இளவரசர் முகமத் நையீப், அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு திடீரென வந்த அல் - காய்தா தீவிரவாதி ஒருவன்,முகமது நையீப்புக்கு அருகே சென்று தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

இதில் இளவரசர் நையீப் காயத்துடன் உயிர் தப்பினார்.அதே சமயம் வேறு யாருக்கும் காயமோ அல்லது உயிர்சேதமோ ஏற்படவில்லை.காயமடைந்த நயீப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குண்டை வெடிக்கச் செய்த தீவிரவாதி நிகழ்விடத்திலேயே உடல் சிதறி பலியானான.இளவரசரை கொல்ல நடந்த முயற்சி சவுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக சவுதி உள்துறை அமைச்சகம் சமீபகாலமாக மேற்கொண்டு வரும் தீவிர பிரச்சாரம் மற்றும் சில நடவடிக்கைகள் காரணமாக ஆத்திரமுற்றே, அல் - காய்தா இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin