தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் ஸ்ரீவைகுண்டம் டி.வி.ராமசுப்பையர் கிளையின் 29-வது ஆண்டு மாநாடு இங்கு நடைபெற்றது.
கிளைத் தலைவர் ஸ்ரீனிவாசதத்தம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சங்கரராமன் முன்னிலை வகித்தார். செயலர் லட்சுமி நரசிம்மன் ஆண்டறிக்கையை வாசித்தார். வரவு, செலவு கணக்கை ஸ்ரீனிவாசன் சமர்ப்பித்தார்.
முன்னாள் துணைத் தலைவர் பிச்சுமணியின் உருவப்படம் திறக்கப்பட்டது.
மாவட்டத் தலைவர் ராஜாராமன், ஆலோசகர் பாஸ்கரன், ஆத்தூர் கிளைத் தலைவர் வைக்கம் கணேஷ், ஆழ்வார்திருநகரி பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த, கோயில்களில் பணிபுரிவோர், சமையல் செய்வோர், புரோகிதம் செய்வோர் உயர்கல்வி பெறவும், அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெறவும் வழிவகை செய்ய வேண்டும்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு உ.வே.சாமிநாதர் பெயரைச் சூட்ட வேண்டும்; செங்கோட்டையில் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்; ராஜாஜி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்; ஸ்ரீவைகுண்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பிரதிநிதி ராஜன், மகளிரணிச் செயலர் ரமணி வெங்கட்ராமன், விநாயகா சுயஉதவிக் குழுவின் ஊக்குநர் காயத்ரி, வைகுண்டபதி, முதல் பிரதிநிதி சம்பூரணம் ராமசாமி, சாவித்ரி பட்டாபிராமன், ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக