செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

வல்லநாட்டில் துப்பாக்கி சுடும்போட்டி: தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி அணி சாம்பியன்- சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் 8 பதக்கங்கள் வென்றார்


தமிழ்நாடு போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 31-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது.

இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டன.

போட்டியானது ரைபிள் சுடும் போட்டி, ரிவால்வர் சுடும் போட்டி. பிக்போர் ரைபிள் சுடும் போட்டி, கார்பைன் துப்பாக்கி சுடும் போட்டி. போட்டி சென்டர் பயர் துப்பாக்கி சுடும் போட்டி உள்ளிட்ட 5 பிரிவுகளில் நடந்தது.

3-வது நாளாக நேற்று காலை நடந்த போட்டிகளை சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், மாநகர கமிஷனர் குணசீலன் ஆகியோர் பார்வையிட்டு சென்றனர்.

இந்த போட்டிகளில் தனிப்பட்ட ஆண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி அணி இன்ஸ்பெக்டர் இளங்கோ, சென்டர் பயர் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றார். 2-வது இடத்தை வடக்கு மண்டல அணியின் ருக்மாங்கதனும், 3-வது இடத்தை மத்திய மண்டல முருகானந்தனும் பெற்றனர்.இந்த போட்டிகளில் கலந்து கொண்ட சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜா¢ங்கிட் 4 தங்கபதக்கம், 1 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் உ¢ள்பட மொத்தம் 8 பதக்கங்களை வென்றார்.

தனிப்படை பெண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை தலைமையிட அணி சியாமளா முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். 2-வது இடத்தை கமாண்டோ பயிற்சி பள்ளி அணி கோமதியும், 3-வது இடத்தை சென்னை தலைமையிட அணி ஸ்ரீதேவியும் பெற்றனர்.

தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி அணி ரைபிள், பிஸ்டல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

2-வது இடத்தை சென்னை தலைமையிட அணியும், 3-வது இடத்தை சென்னை புறநகர் அணியும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ஐ.ஜி.தமிழ்செல்வன் பரிசு வழங்கினார். பரிசளிப்பு விழாவில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்த சாம்பியன் பெற்ற அணிகளுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் டி.ஜி.பி. பரிசு வழங்குவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin