வியாழன், 6 ஆகஸ்ட், 2009

நெல்லை-தூத்துக்குடியில் 4 ஆயிரம் பாங்கி ஊழியர்கள் “ஸ்டிரைக்” அரசுடமை வங்கிகள் மூடப்பட்டன



நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் 4 ஆயிரம் பாங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் கில் ஈடுபட்டதால் அரசுடமை வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டன. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊதிய உயர்வு மற்றம் பென்சன் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 200 அரசுடமை வங்கிகள் செயல்படாமல் மூடப்பட்டன. இதில் வேலை பார்த்த சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று பணிக்கு வரவில்லை.

இதனால் வங்கிகளில் காசோலை, வர்த்தகம், டிமாண்ட் டிராப்ட், போன்ற பண மாற்றம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. நகை கடன்களும் வழங்கப்படாத தால் ஏராளமான பொது மக்கள் பாதிப்படைந்தனர்.

ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்ககடும் கூட்டம் அலை மோதியது. இதனால் பல ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை. ஆனால் தனியார் பாங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. தனியார் பாங்கி ஏ.டி.எம். மையம் மூலம் பலர் பணம் எடுத்தனர். இதனால் தனியார் பாங்கி ஏ.டி.எம் மையங்களிலும் இன்று கூட்டம் அலை மோதியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூரில் வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தூத்துக்குடி யூகோ வங்கி முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, நவநீதிகிருஷ்ணன், தாமஸ் பாலன் உள்டப ஏராள மானஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லையில் இன்று பாங்கி ஊழியர்கள் சந்திப்பு ஐ.ஓ.பி. வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin