திங்கள், 13 ஜூலை, 2009

பாலருவி, கும்பா உருட்டி அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்


குற்றால சீசன் களை கட்டியுள்ளதால் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கும்பா உருட்டி அருவிக்கு படையெடுத்து வருகின்றனர்.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மேற்கு தொடர்ச்சி பருவ மழையின் காரணமாக சீசன் களை கட்டுவது வழக்கம். இந்தாண்டு பருவமழை தாமத்தோடு தொடங்கினாலும் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

காட்டு பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் வறட்சியின்றி தண்ணீர் வரத்து உள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கட்டுகடங்காமல் உள்ளது.

மேலும் அருவிகளில் குளிக்க அலை மோதும் கூட்டத்தினராலும், வாகனத்தினாலும் காவல் துறையினர் பெரும் சிரமத்தோடு பணியாற்றி வருகின்றனர். மேலும் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகையால் குற்றாலமே குலுக்கும் நிலை நேற்று (காலை முதல் மாலை வரை) நீடித்தது.

மேலும் குற்றால அருவிகளில் உள்ள கூட்டத்தை கண்டு மேலும் பிற சுற்றுலா பயணிகள் வாகனங்களில் 30 கிமீ தொலைவிலுள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் கும்பா உருட்டி அருவி, மணலாறு, பகுதிக்கு படையெடுத்தனர்.

இதனை தொடர்ந்து அங்கும் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது.

ஆரியங்காவு பாலருவியில் குளிக்க செல்லும் முன்பு குடிகாரர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. மேலும் பெண்கள் உடைமாற்றுவதற்கு போதிய வசதி இல்லை. அதே சமயம் இரு அருவிகளுக்கு செல்லும் சோதனை சாவடிகளிலும் கட்டண கொள்ளை அதிகமாவே உள்ளது.

வாகனத்திற்கு ஒரு கட்டணம் குளிப்பதற்கு ஒரு கட்டணம் என இஷ்டம் போல் வசூலித்து வனத்துறை வளமாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin