ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதி நீர்பாதுகாப்பு பேரவைக்கூட்டத்துக்கு பேரவை தலைவர் நயினார் குலசேகரன் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கருகும் வாழைகளை காப்பாற்ற தண்ணீர் திறக்க கோரி தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தாமிரபரணி பாசனத்தில் 8 ஆயிரத்து 124 ஏக்கர் பாசன பகுதிக்கு முன்கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்கவில்லை. இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள லட்சக்கணக்கான வாழைகள் தண்ணீர் இல்லாமல் கருகும் அபாய நிலையில் உள்ளது.
இதனால் விவசாயிகள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடையும் நிலையில் உள்ளனர். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் தாமிரபரணி பாசனத்தில் கருகும் வாழைகளை காப்பாற்ற தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை சந்தித்து வாழைப்பயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிப்ப தென்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் சிவஞானவேல், காளிராசன், தாமஸ், பேச்சி, ராஜபாண்டியன், கந்தசாமி, குமார், பாலன், சுப்புராஜ், மலையாண்டி, சந்திர மோகன், கருப்பசாமி, முத்து குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக