ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
செவ்வாய், 7 ஜூலை, 2009
சென்னையில் மேலும் ஒரு புதிய ஐடி பார்க்
சென்னை: லெய்டன் இந்தியா நிறுவனம் சென்னை அருகே புதிய ஐடி பார்க் ஒன்றை உருவாக்குகிறது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை டாடா ரியல்டி அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தப்படி, லெய்டன் இந்தியா நிறுவனத்தின் வல்லுநர்கள், இந்தப் புதிய ஐடி பூங்காவை வடிவமைக்கிறார்கள்.
230 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாகும் இந்த தொழில்நுட்பப் பூங்கா 570000 சதுரமீட்டர் பரப்பளவில் உருவாக்கப்படுகிறது. மருத்துவமனை, மாநாட்டு அரங்கம், பொழுதுபோக்கு அம்சம் என அனைத்தும் நி்றைந்த இந்த பூங்கா சென்னையின் புதிய அடையாளமாகத் திகழும் என்கிறார் லெய்டன் நிறுவன நிர்வாக மேலாளர் டோவிட் சாவேஜ். .
திருவான்மியூர் ரயில் நிலையத்துக்கு அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் இந்த பிரமாண்ட பூங்கா உருவாகிறது.
கடந்த ஆண்டு இதற்கான பணிகளை லெய்டன் தொடங்கியது. அந்த பகுதியில் உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி இப்போது முடிந்துள்ளது. விரைவில் கட்டு்மானப் பணிகள் துவங்குகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக