இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட தலைவர் துராப்ஷா, செயலாளர் செய்யது முகமது, மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.மில்லத்இஸ்மாயில், துணை செயலாளர் பாட்டப்பத்து முகமதுஅலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் தொகுதி எம்.பி. எம்.அப்துல் ரகுமான், மாநில பொது செயலாளர் அபுபக்கர் ஆகியோர் நாளை (சனிக் கிழமை) காலை 7.30 மணிக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மூலம் நெல்லை வருகின்றனர்.
அவர்களுக்கு சந்திப்பு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் படுகிறது. பின்பு 9.30 மணிக்கு அவர்கள் சவுதி அரேபியா சிறையில் வாடும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர்.
10.30 மணிக்கு நெல்லை சந்திப்பு கைலாசபுரம் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைக்கிறார்கள். 11.30 மணிக்கு மேலப்பாளையம் அன்னை ஹஜிரா பெண் கள் கல்லூரியில் நடை பெறும் கருத்தரங்கில் பேசு கின்றனர்.
தொடர்ந்து மாலையில் காயல்பட்டினத்தில் நடை பெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசு கின்றனர்.
இருவரையும் வரவேற்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொண்டர்கள் நாளை காலை 7.30 மணிக்கு கையில் பிறை கொடி ஏந்தி வர அழைக் கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக