ஞாயிறு, 19 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் புனித சந்தியாகப்பர் திருத்தல் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் வீதி வழியே சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து ஊர்வலம் திருத்தலம் சென்றது.

பின்னர் அங்கு இருந்து ஜெபகீதம் முழங்க கொடிமரம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். முதன்மை குரு அருள்மணி பர்னபாஸ் அடிகளார் கொடியேற்றினார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சபையை சேர்ந்தவர்கள் தலைமை தாங்கி விழாவை நடத்துவார்கள். பாதிரியார்கள் செல்வன், ஸ்டான்லி, கிராசியஸ் மைக்கிள்,டிக்ஸன், இருதய ராஜா, ரஞ்சித்குமார் ஆகியோர் தலைமை தாங்கி விழாவை நடத்து கின்றனர்.

நவநாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நடைபெறும். மாலை 6.30மணிக்கு ஜெபமாலை மறையுரை, நற்கருணை ஆசிர் நடைபெறும். 25-ந்தேதி காலை 10 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin