புதன், 1 ஜூலை, 2009

உத்தமர் காந்தி விருது: பஞ்சாயத்துகளுக்கு ஆட்சியர் அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 2008-2009ம் ஆண்டிற்கான 15 சிறந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கான உத்தமர் காந்தி ஊராட்சி விருது வழங்கப்பட உள்ளது என்றும் சிறப்பாக சேவை புரிந்த பஞ்சாயத்து தலைவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் பஞ்சாயத்துகளில் ஓட்டு மொத்த முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில் உத்தமர் காந்தி விருது கடந்த 2006-2007ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஓவ்வொரு வருடமும் 15 சிறந்த கிராம பஞ்சாயத்துகளை தேர்ந்து எடுத்து பஞ்சாயத்தில் மிகச் சிறந்த பணிகள், பூர்வங்கப்பணிகள், வருமானத்தை பெருக்குதல், புதிய முயற்சிகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிக்காக வழங்கப்படுகிறது.

இந்த விருதிற்கு தேர்வு செய்யப்படும் பஞ்சாயத்துக்கு ஓரு நற்சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படுகின்றன. 2008-2009ம் ஆண்டிற்க்கான விருது பெருவதற்கு ஆர்வமுள்ள பஞ்சாயத்து தலைவர்கள் 2003-2004ம் ஆண்டு முதல் 2007-2008ம் ஆண்டு வரை 5 ஆண்டு காலத்தில் எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கைகளை மற்றும் சிறப்பு முயற்சிகள் குறித்து முழு விபரத்தினை வரும் 31ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

கருத்துருக்கள் பெறப்பட்ட பின் தொடர்புடைய பஞ்சாயத்து தலைவர்களிடம் கூடுதலான தகவல்கள் கேட்டுப் பெறப்படும். அதனைத்தொடர்ந்து ஆட்சியர் தலைமையிலான குழு ஓவ்வொரு கருத்துருவினையும் உரிய முறையில் பரிசீலனை செய்து தகுதியான பஞ்சாயத்து தலைவர்களை அரசுக்கு பரிந்துரை செய்யும்.

எனவே உத்தமர் காந்தி ஊராட்சி விருது பெற ஆர்வமுள்ள பஞ்சாயத்துகள் கருத்துருக்களை உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முருகன்.ஆர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin