வியாழன், 2 ஜூலை, 2009

50 புதிய மாடல் லேப்டாப்: லெனோவா திட்டம்


லேப்டாப் எனப்படும் மடிக்கணினி தயாரிப்பில் முன்னணியில் உள்ள சீனாவின் லெனோவா நிறுவனம் 50 புதிய ரகங்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தில்லியில் செவ்வாய்க்கிழமை 7 புதிய மாடல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது.

அதிக அளவில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமர் பாபு தெரிவித்தார்.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானத்தில் 40 சதவீதம் இந்தியாவிலிருந்து கிடைப்பதாகவும் மாதத்திற்கு சுமார் 40 ஆயிரம் லேப்டாப்களை விற்பனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட லேப்டாப்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

தேவை அதிகரிக்கும்போது அவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை புதுச்சேரியில் உள்ளது. இங்கு 30 லட்சம் லேப்டாப்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin