பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் முகம்மது நபி பற்றி கருத்து கூறி இருந்தார். வரலாற்றில் அவர் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியிருந்தார்.
இது இஸ்லாமிய மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மும்பையில் உள்ள அமன் கமிட்டி பந்த்ரா போலீசில் புகார் கொடுத்தது. நடிகர் ஷாருக்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மத ரீதியாக பேசி மக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக ஷாருக்கான் மீது பந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷாருக்கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கொடுக்க முடியும்.
தற்போது ஷாருக்கான் அமெரிக்காவில் உள்ளார். அவர் மும்பை திரும்பியதும் அவரிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று பந்த்ரா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஜார்ஜ் கூறினார்.
செய்தி : மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக